செய்திகள்மதுரை

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மருத்துவ, மனரீதியான ஆலோசனை மையம் திறப்பு

மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அறிஞர் அண்ணா மாளிகையில் 24 மணி நேரம் செயல்படும் மருத்துவ மற்றும் மனரீதியான ஆலோசனை வழங்கும் மையத்தினை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய் முன்னிலையில்கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜீ, வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் (28.06.2020) துவக்கி வைத்து கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்தாவது: மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளிலும் உள்ள சுமார் 4 லட்சம் வீடுகளில் காய்ச்சல் குறித்து 1400 களப்பணியாளர்கள் கொண்ட காய்ச்சல் கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 100 வீடுகள் வீதம் மூன்று நாட்களுக்கு 300 வீடுகளில் உள்ள நபர்களில் காய்ச்சல், சளி, இருமல் குறித்து தேவையான மருத்துவ உபகரணங்களுடன் காய்ச்சல் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மதுரை மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை காய்ச்;;சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியில் 16 நடமாடும் வாகனங்கள் மூலம் மருத்துவ குழுவினர் நாள் ஒன்றுக்கு 3 இடங்களில் வீதம் மொத்தம் 48 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி கண்டறியப்பட்டவர்களில் 4 கட்டங்களாக ஆலோசனை வழங்கப்படுகிறது.முதற்கட்டமாக தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்காக இந்த ஆலோசனை வழங்கும் மையம் இன்று மதுரை மாநகராட்சியில் துவக்கி வைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்;டு ஆலோசனை வழங்கப்பட்டு அரசு இராசாசி மருத்துவமனை, தியாகராசர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அரசு விவசாயக் கல்லூரி, தோப்பூர் ஆகிய இடங்களில் ஏறத்தாழ 2000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைக்கப் படுவார்கள்.

அங்கு அவர்களுக்கு 3 வேளையும் உணவுகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு மன உளைச்சலை போக்குவதற்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. இது தவிர மாநகராட்சியின் அனைத்து பகுதி மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ ஆலோசனை மையத்தில் 11 ஆலோசகர்கள் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் மன உளைச்சல், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை நீக்கி அவர்களை விரைவில் குணமடைய ஆலோசனை வழங்குவார்கள். தேவைக்கேற்ப ஆலோசகர்கள் அதிகரிக்கப்படுவார்கள்.

தற்போது கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு தோப்பூரில் தங்க வைக்கப்பட்டு ராஜா மில் சாலை பகுதியை சார்ந்தவர்களுடன் கலந்து ஆலோசித்த போது உற்சாகமாக பதில் அளித்தார்கள். முகாமில் உணவுகள், மருந்து மாத்திரைகள், சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இதன் நோக்கம் பொதுமக்களிடம் உள்ள பயத்தை போக்குவது ஆகும்.

முதலமைச்சர் அறிவித்தவுடன் முதன்முறையாக மதுரை மாநகராட்சியில்தான் இந்த கவுன்சிலிங் மையம் துவங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களை சமூகத்தில் ஒதுக்கி வைக்ககூடாது இது ஒரு தொற்றுதான். நாம் முகக்கவசம் அணிந்து கொண்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களை அரசு தத்தெடுத்த இந்த நோயிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உயிர்காக்கும் சிறப்பான மருந்து மதுரைக்கு 500 வந்துள்ளது. மதுரையை பொறுத்தவரை இறப்பு விகிதம் குறைவு. அதிகப்படியான பரிசோதனை செய்யப்படுவதால் அதிகமான தொற்று கண்டறியப்படுகிறது.

மதுரை மாநகராட்சியை பொறுத்தவரையில் எதிலும் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கபசுர குடிநீர்;, ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை மதுரை மாநகராட்சி தொடர்ந்து வழங்கி வருகிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு முறையாக உணவுகள் வழங்கப்படும். இறப்பை குறைத்து சொல்வதற்கான அவசியம் இல்லை. எதிர்க்கட்சிகள் பொதுமக்களிடம் பீதியை உருவாக்க பொய்பிரச்சாரம் செய்கிறார்கள். தொற்று அதிகமான பிறகு வருவதால்தான் இறப்பு ஏற்படுகிறது ஆரம்ப நிலையிலேயே வந்துவிட்டால் இறப்பு அறவே வராது. மதுரை மாவட்ட மக்களை பொறுத்தமட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பல்வேறு நோய்கள் உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.

படுக்கை வசதியை அதிகரிப்பதற்காக தற்போது பல்வேறு இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் ஆலோசனை மற்றும் ஆறுதல் சொல்வதால் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 4.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 நாட்களில் நிவாரணம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றார்.

வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்ததாவது: பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தேவையான அளவு பயன்படுத்திக் கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு தனி அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. இதற்காக தனி கணக்கு வைக்கப்பட்டு கருவூலத்தில் இருந்து 24 மணி நேரமும் எவ்வளவு வேண்டுமானலும் எடுத்துக் பயன்படுத்தலாம் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை கூட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நாளைய தினம் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்கிறார்கள். மத்திய அரசு 5 முறை ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், உள்துறை, பாரத பிரதமர் அவர்கள் ஒவ்வொரு முறையும் வழிகாட்டுதல் கொடுப்பார்கள். அதன்படி மருத்துவ குழு, வல்லுநர் குழு, வழிகாட்டுதலின்படி சூழ்நிலைக்கு ஏற்ப மக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அதன்படி ஊரடங்கு குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

முன்னதாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் 5000 தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் அடங்கிய மருந்து பெட்டகத்தினை வழங்கும் வகையில் முதற்கட்டமாக இலவசமாக 10 தூய்மை பணியாளர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கி துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அரசு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், சிறப்பு மருத்துவ அலுவலர் சித்ரா, துணை இயக்குநர் பொது சுகாதாரம் பிரியாராஜ், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஏ.ராஜா, உதவி நகர்நல அலுவலர் வினோத் ராஜா, உதவி ஆணையாளர் பிரேம்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேலு. சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் மனோகரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் சுகாதார ஆய்வாளர்கள் வெங்கிடசாமி, ஓம்சக்தி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat