செய்திகள்மாநகராட்சி

மதுரை மாநகராட்சி குடியரசு தினவிழா

மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறந்த ஓட்டுனர்களுக்கு 4 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கு விருது, பாராட்டு சான்றிதழ்களையும், ரொக்கப்பரிசுகளையும் ஆணையாளர் ச.விசாகன்,வழங்கினார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஆணையாளர் ஃ தனி அலுவலர் ச.விசாகன், இன்று (26.01.2020) தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்
மதுரை மாநகராட்சியில் 20 ஆண்டுகள் விபத்தின்றி சிறப்பாக பணிபுரிந்த 7 வாகன ஓட்டுனர்களுக்கு 4 கிராம் தங்கப்பதக்கமும், 10 ஆண்டுகள் விபத்தின்றி வாகனம் இயக்கிய 25 வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள காமதேனு வங்கி வைப்புத் தொகை பத்திரமும் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 85 நபர்களுக்கு சிறப்பு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்ற செ.ஆஷிகா ராணி ரூ.5000ம், இரண்டாம் இடம் பெற்ற ப.ர.பிரியங்கா ரூ.3000, மூன்றாம் இடம் பெற்ற கோ.மதுமிதா ரூ.2000ம், 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்ற ஜா.ஷபானா ரூ.5000ம், இரண்டாம் இடம் பெற்ற ஈ.மோகனா லோகபிரியா ரூ.3000ம், மூன்றாம் இடம் பெற்ற செ.தேவதர்ஷினி ரூ.2000ம், தேசிய அளவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டியில் தனிநபர் பிரிவில் முதல் இடமும், குழுப்பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற கஸ்தூரிபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எச்.அஸ்விகா என்பவருக்கு ரூ.3000மும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தினவிழா விளையாட்டு போட்டியில் இறகுப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்ற அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி .ஜே.ஜெர்லின் அனிகாவிற்கு ரூ.3000மும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் முதல் இடம் பெற்ற இளங்கோ மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் பி.ஆறுமுககமலேஷ் என்பவருக்கு ரூ.3000மும், குறுவட்டம், வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் முதலிடமும், மாநில அளவில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்ற காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்.நாகலெட்சுமி என்பவருக்கு ரூ.3000மும், குறுவட்டம், வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் முதலிடமும், மாநில அளவில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கமும் பெற்றமைக்காக காக்கைபாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.சௌந்தர்யா என்பவருக்கு ரூ.3000மும், மாநில அளவில் நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட வாள்சண்டை போட்டியில் மூன்றாம் இடமும் பெற்ற அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எம்.விஜயபாரதி என்பவருக்கு ரூ.3000 மும், மாநில அளவில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட வாள்சண்டை போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆர்.தஸ்லிமா பானு என்பவருக்கு ரூ.3000 மும், 10 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற 19 பள்ளிகளுக்கும், 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற 4 பள்ளிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் கேடயங்களும், சிறந்த ஆசிரியர்களுக்கும், பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, இசைப்போட்டி போன்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மேலும் மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்கிய தன்னார்வலர்கள் விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் மதுரை முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு தலைமையிடம் அமைக்க தனியாருக்கு சொந்தமான காலியிடத்தினை மாநகராட்சிககு தானமாக வழங்கியமைக்காகவும், திரு.டி.பி.ராஜேந்திரன் திருப்பதி விலாஸ் வத்தல் கம்பெனி மதுரை திரு.வி.க. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.110 லட்சம் நிதியுதவி வழங்கியமைக்காகவும், ர்ஊடு நிறுவனம் மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டி வழங்கியமைக்காகவும், HI-TECH ARAI PRIVATE LTD. MADURAI மாநகராட்சிக்கு சொந்தமான ஊரணிகளை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி கொடுத்தமைக்காகவும், தண்ணீர் தண்ணீர் தொண்டு நிறுவனம் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஊரணிகளை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி கொடுத்தமைக்காகவும், யுளளழஉயைவழைn ழக ஊiஎடை நுபெiநெநசள மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஊரணிகளை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தி கொடுத்தமைக்காகவும், ராஜ்மஹால் ஜவுளி நிறுவனம் மதுரை குப்பைகளை தரம்பிரித்து வாங்குவதற்காக புதிய இலகுரக வாகனங்கள் வழங்கியமைக்காகவும், திருமதி.ஏ.எட்வின் ஜாய், மதுரை வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களை ஏற்படுத்துவதில் சிறப்பாக ஈடுபட்ட சிறந்த சமூக ஆர்வலர்க்காகவும்,மரு.சி.ராமசுப்பிரமணியன் செல்லமுத்து அறக்கட்டளை, மதுரை மாநகராட்சி பள்ளிகளில் HAPPY SCHOOLING திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காகவும், தானம் அறக்கட்டளை மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஊரணிகளை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கியமைக்காகவும் என அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளையும் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். இறுதியில் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் துணை ஆணையாளர்விநாகஜோதி, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் செந்தில்குமார், உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, பிரேம்குமார், விஜயா, சேகர், உதவி ஆணையாளர் (வருவாய்) ஜெயராமராஜா, உதவி ஆணையாளர் (கணக்கு)சுரேஷ்குமார், கல்வி அலுவலர் பொ.விஜயா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் செயற்பொறியாளர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன், முருகேசபாண்டியன், உதவிசெயற்பொறியாளர் மனோகரன், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்ஹிந்துபுரம் மாநகராட்சி சுந்தராஜபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தல்லாகுளம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

fifteen − 12 =

Related Articles

Close