மாநகராட்சி

மதுரை மாநகராட்சி புதிதாக கட்டப்பட்டுள்ள 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத் அமைச்சர் செல்லூர் கே.ராஜீ திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை ஆணையாளர் ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ இன்று (06.02.2020) திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் திடக்கழிவுகள் வீடு வீடாக முதற் கட்டமாக டிரைசைக்கிள் மூலம் சேகரிப்பு செய்யப்பட்டு பின்னர் இரண்டாம் கட்ட சேகரிப்பாக காம்பேக்டர் மற்றும் டம்பர் பிளேசர் மூலம் வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை எளிதாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, வார்டுப் பகுதிகளில் திடக்கழிவுகளை சேகரித்து உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 23 மையங்கள் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 18 மையங்கள் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 41 மையங்கள் ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 25 மையங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட உள்ளது. அவற்றில் தத்தனேரி, மேனேந்தல், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் தற்போது மண்டலம் எண்.1 வார்டு எண்.22 கோச்சடை பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் 2 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களும், வார்டு எண்.5 சேக்கிழார் தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையமும், மண்டலம் எண்.3 வார்டு எண்.71 ஐ.ஐ.சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையமும், வார்டு எண்.57 அனுப்பானடியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடமும் என மொத்தம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் திறந்து வைக்கப் பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

இம்மையங்களில் 44 தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கும் கழிவுகளை நாள் ஒன்றுக்கு 25 டன் வீதம் பெறப்பட்டு உரமாக்கம் செய்யப்பட உள்ளது. இம்மையங்களில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று கழிவுகளை தரம் பிரித்து பேட்டரி வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மூலமாக பெறப்பட உள்ளது. மேற்படி தரம் பிரிக்கும் திட்டமானது விரைவில் அனைத்துப் வார்டுப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இந்நடவடிக்கை மூலம் மதுரை மாநகர் குப்பைத் தொட்டியில்லா நகரமாக (டீin குசநந ஊவைல) மாற்றப்பட உள்ளது.

முன்னதாக தமிழ்நாடு சாலைகள் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 51.86 கி.மீ. நீளத்திற்கு ரூ.25.56 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. அவற்றில் மண்டலம் எண்.4 வார்டு எண்.100 பைக்காரா, திருவள்ளுவர் நகர் 9, 10, 11 வது தெருக்கள், தேவி கருமாரியம்மன் கோவில் மெயின் 1, 2 மற்றும் குறுக்குத் தெருக்களில் என ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, எஸ்.எஸ்.சரவணன், நகரப்பொறியாளர் அரசு, உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, உதவி ஆணையாளர்கள் சேகர், பழனிச்சாமி, விஜயா, செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப்பொறியாளர்கள் பாஸ்கரன், காமராஜ், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், வீரன், சிவசுப்பிர மணியன், சுகாதார ஆய்வாளர் கோபால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!