மாநகராட்சி

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 குறைதீர்க்கும் முகாமில் 25 மனுக்கள்

ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் ச.விசாகன் உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் ச.விசாகன், தலைமையில் இன்று (17.12.2019) நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பொது மக்களிடமிருந்து ஆணையாளர் நேரடியாக பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளிலும் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள், பூங்காக்கள், கழிவுநீரேற்று நிலையம், குடிநீரேற்று நிலையங்கள் ஆகிய பகுதிகளில் அடர்வனம் (மியாவாக்கிங்) முறைப்படி அதிக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்குமாறு உத்தரவிட்டார்.

மழைநீர் கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களில் மழைநீர் கட்டமைப்புக்களை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினார். பொறியாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழுதான பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சரிசெய்யுமாறும், முக்கிய தெருக்களில் குப்பைகள் தேங்காதவாறு அப்புறப்படுத்துமாறும்,  ஒரு நாளுக்கு இரு முறை சுழற்சி முறையில் குப்பைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். மேம்படுத்தப்பட்ட அழைப்பு மைய எண் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரிசெய்யுமாறும் கூறினார்.

இம்முகாமில் துணை ஆணையாளர் வி.நாகஜோதி, உதவி ஆணையாளர் விஜயா, செயற்பொறியாளர் (திட்டம்) ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி ஆணையாளர் (வருவாய்) ஜெயராமராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் வீரன், உதவிப் பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

three × one =

Related Articles

Close