செய்திகள்மாநகராட்சி

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம்

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.159 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து கூடுதலான பணியாளர்களை நியமித்து பணியினை விரைந்து மேற்கொள்ளுமாறும், கீழ ஆவணி மூல வீதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்லடுக்கு வாகன காப்பக கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நேதாஜி சாலை முதல் பெருமாள் கோவில் தெப்பக்குளம், மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகால் வரையும், பழைய சொக்கநாதர் கோவில் முதல் மீனாட்சியம்மன் கோவில் திருமலை நாயக்கர் வரையும் பாரம்பரிய நடைபாதைகள் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இவற்றில் நேதாஜி சாலையில் இருபுறங்களிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு குறுக்குத் தெருக்களில் வரும் மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு ஏதுவாக கட்டமைப்புக்களை ஏற்படுத்துமாறு கூறினார்.

மேலும் அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய நான்கு மாசி வீதிகளில் ஸ்மார்ட் சாலை திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை வசதி, 24ஒ7 புதிய குடிநீர் இணைப்பு, மழைநீர் வடிகால், தரைவழி மின்வயர் செல்வதற்கான வசதிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இப்பணிகளை ஆய்வுமேற்கொண்டு ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள மணல்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறும், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ளுமாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, செயற் பொறியாளர் முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர் மயிலேறி நாதன், ஆறுமுகம், கந்தப்பா, உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

eighteen + nineteen =

Related Articles

Close