கலெக்டர்செய்திகள்

மதுரை மாவட்டஆட்சியர் 71-வதுகுடியரசுதினவிழா

மதுரைமாநகரகாவற்படையினா பயிற்சிமைதானத்தில் இன்று(26.01.2020) நடைபெற்ற71-வதுகுடியரசுதினவிழாவில் மாவட்டஆட்சி;த்தலைவர் டி.ஜி.வினய காலை தேசியகொடியினை ஏற்றிவைத்து காவல்துறை, ஊர்க்காவல்படை, தீயணைப்புபடை, தேசியமாணவாபடை ஆகியோரின் அணிவகுப்புமரியாதையை ஏற்றுக்கொண்டு, 177பயனாளிகளுக்குரூ.56,64,560 மதிப்பிலானநலத திட்டஉதவிகளை வழங்கினார். இந்தஅணிவகுப்பு மரியாதையின்போதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன உடனிருந்தார்.

இந்நிகழ்ச்சியில்மாவட்டஆட்சித்தலைவர் சுதந்திரபோராட்டதியாகிகளுக்கு சால்வைஅணிவித்துகௌரவித்தார். தொடர்ந்துமுன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 5பயனாளிகளுக்குவருடாந்திரபராமரிப்புமானியம் ரூ.1,75,000 மதிப்பிலும்,மாவட்டமாற்றுத்திறனாளிகள் நலத்துறைசார்பில் 1 பயனாளிக்குரூ.54,840 மதிப்பில் இணைப்புசக்கரம் பொருத்தப்பட்டமோட்டார் பொருந்திய மூன்றுச் சக்கரவாகனமும்,வருவாய்த்துறையின் சார்பில்மாண்புமிகுமுதலமைச்சரின் பொதுநிவாரணநிதியின் கீழ் 10பயனாளிகளுக்குரூ.10,65,000 மதிப்பிலானஉதவித்தொகையும்,சமூகபாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்குஉதவித்தொகைரூ.80,720 மதிப்பிலும்,வேளாண்மைத்துறைசார்பில் அட்மாத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்குவேளாண் இடுப்பொருட்கள் ரூ.57,000 மதிப்பிலும்,தோட்டக்கலைத்துறைசார்பில் 4 பயனாளிகளுக்கு கஜா கூடுதல் சிறப்புத் தொகுப்புரூ.32,000 மதிப்பிலும்,குடிசைமாற்றுவாரியம் சார்பில் அனைவருக்கும் வீடுகட்டும்த் திட்டத்தின்கீழ் 20 பயனாளிகளுக்குரூ.42,00,000 மதிப்பில் வீடுகட்டுவதற்கானஆணையும் எனமொத்தம் 177 பயனாளிகளுக்குரூ.56,64,560 மதிப்பிலானநலத்திட்டஉதவிகளையும்,147 காவலர்களுக்குமாண்புமிகுதமிழகமுதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டவிருதுகளும்,74காவலர்களுக்குசிறந்தகாவலர்களுக்கானபதக்கங்களும்,சிறப்பாகபணியாற்றியஅரசுஊழியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் 255 நபர்களுக்கும் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்டஆட்சித்தலைவர்; வழங்கினார்.

இதனைதொடர்ந்துநாய்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,புனிதஅந்தோனியார் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி,கேப்ரன்ஹால் (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி,இ.எம்.ஜி யாதவா (பெண்கள்) கலைக்கல்லூரி,சௌராஷ்டிரா(பெண்கள்) மேல்நிலைப்பள்ளி,சித்துமெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,ஓ.சி.பி.எம். (பெண்கள்) மேல்நிலைப்பள்ளி,சேகரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிஆகியபள்ளிகளைசேர்ந்த 925 மாணவ,மாணவியர்கள் பங்குபெற்றகண்கவர் கலைநிகழ்ச்சிகள்சிறப்பாகநடைபெற்றது. இக்கலைநிகழ்ச்சியில் பங்குபெற்றஅனைத்துமாணவ,மாணவியர்களுக்கும்பாராட்டுச்சான்றிதழ்களைமாவட்டஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்மாநகரகாவல்துறைஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம தென்மண்டலகாவல்துறைதலைவர் சண்முகராஜேஸ்வரன், தென்மண்டலகாவல்துறைதுணைத்தலைவர் டாக்டர்.அனிவிஜயர், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) பிரியங்கா, உதவிஆட்சியர் பயிற்சிசெல்வி.ஜோதிசர்மர், மாவட்டவருவாய் அலுவலர் பி.செல்வராஜ்;, உள்ளிட்டஅரசுஅலுவலர்கள்,செய்தியாளர்கள்,மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உட்படஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

thirteen + one =

Close