செய்திகள்மதுரை

ரூ.1000 ரொக்கமுடன் பொங்கல் பரிசு

மதுரை மாவட்டத்தில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டுரூ.1000 ரொக்கமுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை 8,50,015 குடும்ப அட்டைதாரர்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.
தைபொங்கல் திருநாள் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.

 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார்கள். முதன்முதலாக பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை,5 கிராம் ஏலக்காய், 2 அடி கரும்புத்துண்டு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.100ஃ- ரொக்கமும் வழங்கி ஏழை, எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்தார்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். உலகத்தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உழவர் பெருமக்களுக்கும், இறைவனுக்கும் இயற்கைக்கும் உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விதமாக பொங்கல் பண்டிகையினை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில் திருநாளை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் ரொக்கம் ரூ.100ஃ-ல் இருந்து ரூ.1,000ஃ- ஆக உயர்த்தி வழங்கி வருகிறார்கள்.

கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள 1354 நியாயவிலைக்கடைகள் மூலம் 8,90,270 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சி மற்றும் 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்க தொகை ரூ.1000ஃ- ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு வழங்கப்பட்டது.இதற்கென மதுரை மாவட்டத்தில் 17600 கிலோமுந்திரி, 17600 கிலோ உலர் திராட்சை மற்றும் 4400 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

2020ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள 1392 நியாயவிலைக்கடைகள் மூலம் 8,50,015 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சி மற்றும் 5 கிராம் ஏலக்காய் மற்றும் ரொக்க தொகை ரூ.1000ஃ- ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கென மதுரை மாவட்டத்தில் 16,942 கிலோ முந்திரி, 16,942 கிலோ உலர் திராட்சை 4,235 கிலோ ஏலக்காய் கொள்முதல்; செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளின் நெகிழ்ச்சிப் பேட்டி :
மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த செல்வி தெரிவிக்கையில்: “எனது கணவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நான் அரிசி கார்டு வைத்துள்ளேன். கடந்த வருடம் தமிழக அரசு 1000 ரூபாயினையும், பொங்கல் பரிசு தொகுப்பினையும் கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கொடுத்தது. இந்த ஆண்டும் அதே போன்று 1000 ரூபாயினை பொங்கல் விழாவை முன்னிட்டு வழங்கினார்கள். பொங்கலுக்கு முன்னரே பரிசுத்தொகுப்பும்,ரூ.1000-மும் கிடைத்ததனால் இந்தாண்டும் பொங்கலை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”என தெரிவித்தார்.

செக்காணுரனியைச் சேர்ந்த உமா தெரிவிக்கையில்:“எங்கள் குடும்பத்திற்கு சர்க்கரை கார்டு கிடைத்தது. சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்ற கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பினால் எனது கார்டை அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பித்தேன், தற்போது எனது கார்டு அரிசி கார்டாக மாற்றிவிட்டேன்.இதனால் எனது குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொங்கல் பரிசுத் தொகுப்பு எனக்கு கிடைத்துள்ளது. எவ்வித சிரமமும் இன்றி 1000 ரூபாயினையும், பொங்கல் பரிசுத் தொகுப்பையும் அரசு ஊழியர்கள் எங்கள் இருப்பிடத்திற்கே வந்து கொடுத்தார்கள். இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

6 + 19 =

Related Articles

Close