செய்திகள்மதுரைமாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 568 பயனாளிகளுக்கு ரூ.1,15ஃ- கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் தலைமையில் இன்று (12.02.2020) மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி தெரிவிக்கையில்.

வாரந்தோறும் திங்கட்கிழமைஅன்றுமாவட்டஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்களின் குறைகளைநேரடியாககேட்டறிந்து,அவர்களிடமிருந்துமனுக்களைப்பெற்றுதகுதிவாய்ந்தமனுக்களுக்குஉடனடிதீர்வுவழங்கப்பட்டுவருகிறது. அதனைத்தொடர்ந்துஒவ்வொருகிராமத்திலும் மக்கள் தொடர்புமுகாம் ஏற்பாடுசெய்துநடத்தப்பட்டுவருகிறது.

கடந்த மூன்றுஆண்டுகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் அதிமானமக்களைசந்தித்து,பல்வேறுசிறப்பானதிட்டங்களைசெயல்படுத்திஅன்னைதமிழகத்தை இந்தியாவிலேயேமுதல் மாநிலமாகமாற்றியுள்ளார்,மக்களளைத் தேடிஒருஅரசு இந்தியாவில் உள்ளதுஎன்றால் அதுமாண்புமிகுஅம்மாஅவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசுஆகும். கடந்தகாலங்களில் நலத்திட்டங்களைபெறுவதற்காகமக்கள் அரசுஅலுவலகம் சென்றுபெறவேண்டியநிலை இருந்தது. இந்திலையைமாற்றிமக்களைதேடிஅரசுசெல்லவேண்டும் என்றுமாண்புமிகுஅம்மாஅவர்கள் அறிவுறுத்திபல்வேறுதிட்டங்கள் பொதுமக்களுக்குஅளித்தார்கள்.

தமிழகத்தில் வாழும் அனைத்துபொதுமக்களின் குறைகளையும் கண்டறிந்து அவற்றை சீரியமுறையில் தீர்வுகாணும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகசட்டமன்ற விதி 110-ன் கீழ் 18.07.2019 அன்று அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வார்டுகள் (ம) கிராமங்கள் தோறும் மண்டல துணைவட்டாட்சியர் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு நேரடியாக மனுக்களைப் பெற்று தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 60 நாட்களில் தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடங்கிவைத்துள்ளார்கள். விண்ணப்பம் செய்த 40 நாட்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டமனுக்கள் இம்முகாம் மூலம் பொறப்பட்டுள்ளது.
உதவிதொகைவேண்டிவிண்ணப்பம் கொடுத்தபயனாளிகளின் வருமானஉச்சவரம்பைரூ.1 இலட்சமாகஉயர்த்திஉள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்.தமிழ்நாடுஅரசாணைஎண்.318 மூலம் ஏழைஎளியமக்கள் 5 வருடத்திற்குமேல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குநிலங்களில் குடியிருப்பவர்களுக்குபட்டாவழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசிடமிருந்து இலவசவீட்டுமனைபட்டாபெற்றவர்களுக்குமிகவிரைவில் வீடுகட்டித்தரதமிழ்நாடுஅரசுநடவடிக்கைமேற்கொள்ளஉள்ளதுஎனதெரிவித்தார்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, ஆதிதிராவிடர்நலத்துறைஅலுவலர் தனலெட்சுமிஅவாகள், வட்டாட்சியர் திருமதி.சாந்தி, டி.கல்லுப்பட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சண்முகப்பிரியா பாவடியான், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

3 + 13 =

Related Articles

Close