செய்திகள்மாநகராட்சி

மதுரை மாவட்டம் மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்பவியல்த்துறை அமைச்சர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 3318 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தலைமையில் மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இன்று (06.02.2020) விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவிக்கையில்.

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பள்ளிக்கல்வியை ஊக்குவிப்பதில் வேறு எந்த மாநிலமும் செய்ய முடியாத சிறந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து வழங்கிவருகிறது. நிர்வாகர்Pதியாக தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் பெற்றிருப்பது நமது வரலாற்று பெருமையாகும். உலக அளவில் தற்போது நிகழ்ச்சிகளில் திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போன்ற நூல்களை எடுத்துரைத்து மேற்கோள் காட்டப்படுகிறது என்பது நமது தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாகும்.

மாணவர்கள் கல்வி உபகரணங்களை பெற தாய், தந்தையை எதிர்பார்த்திருந்த காலம் மாறி தற்போது அரசு பள்ளிகளில் அனைத்து விதமான உபகரணங்களும் மாணவர்களின் நலனுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறைக்கென 27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது 5 மற்றும் 8 வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிற்கே வழிகாட்டும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி உள்ளது. உங்களது உழைப்பின் மூலமாக தாய், தந்தையினர் மற்றும் ஆசிரியர்களை மகிழ்ச்சி படுத்தவேண்டும்.

மிகச்சிறந்த மென்பொருள் நிறுவனமான கூகுள் (புழுழுபுடுநு) நிறுவனத்தை வழிநடத்தி வரும் சுந்தர் பிச்சை போல் நீங்கள் வரவேண்டும் என்றால் நீங்கள் கடுமையாக உழைத்து சாதனை படைத்தவர்களாக எதிர்காலத்தில் வரவேண்டும். இதுபோன்று தமிழ்நாடு அரசின் சிறந்த திட்டங்களை பயன்படுத்தி உயர்ந்த அரசுத்துறை அலுவலர்களாகவும், சான்றோர்களாகவும் எதிர்காலத்தில் நீங்கள் வருவீர்களானால் அதுவே இந்த அரசுக்கு கிடைக்கின்ற மகிழ்ச்சி ஆகும்.

மாணவ, மாணவிகளுகு;கு பள்ளி திறந்த முதல்நாளே நோட்டு மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். நேரத்தை வீனடிக்காமல் நன்றாக படித்து வாழ்வில் வெற்றியடைய வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11ஆம் பயிலும் 50,527 மாணவர்களுக்கு ரூ.18.76 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 6,77,820 மாணவர்களுக்கு பாட நூல்களும், 5,14,099 மாணவர்களுக்கு பாட குறிப்பேடுகளும், 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 3,11,847 மாணவர்களுக்கு 4 செட் விலையில்லா வண்ண சீருடைகளும், 5,80,975 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில்(2019-2020) திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1.31 கோடி செலவில் 3,318 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தின் எதிர்கால தூண்களான மாணவ, மாணவியர்கள் அரசின் திட்டங்கள் அனைத்தையும் பெற்று பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல், கல்வியில் சிறந்து விளங்கி,தமிழகத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இன்று நடைபெற்ற விழாவில்,

திருமங்கலம், பி.கே.எண் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 396 விலையில்லா மிதிவண்டிகளும்,
திருமங்கலம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு 362 விலையில்லா மிதிவண்டிகளும்.
திருமங்கலம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 120 விலையில்லா மிதிவண்டிகளும்,
திருமங்கலம், பி.கே.எண் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு 321 விலையில்லா மிதிவண்டிகளும்,
திருமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி அச்சம்பட்டி (இருபாலர்கள்) மாணவ மாணவியர்களுக்கு 32 விலையில்லா மிதிவண்டிகளும்,
திருமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி மேலக்கேட்டை (இருபாலர்கள்) மாணவ மாணவியர்களுக்கு 75 விலையில்லா மிதிவண்டிகளும்,
திருமங்கலம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி பி.அம்மாபட்டி (இருபாலர்கள்) மாணவ மாணவியர்களுக்கு 104 விலையில்லா மிதிவண்டிகளும்,
ஜோதி தர்மர் அ.சி.சி மேல்நிலைப்பள்ளி (இருபாலர்) சாத்தங்குடி மாணவ, மாணவியர்களுக்கு 121 விலையில்லா மிதிவண்டிகளும்,
அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேலஉரப்பனூர், மாணவியர்களுக்கு 17 விலையில்லா மிதிவண்டிகளும்,
ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கரடிக்கல், மாணவியர்களுக்கு 13 விலையில்லா மிதிவண்டிகளும்,
அரசு கள்ளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செக்கானூரணி, மாணவர்களுக்கு 59 விலையில்லா மிதிவண்டிகளும்,
அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செக்கானூரணி, மாணவியர்களுக்கு 77 விலையில்லா மிதிவண்டிகளும்,
அரசு கள்ளர்; மேல்நிலைப்பள்ளி கப்பலூர், மாணவ, மாணவியர்களுக்கு 58 விலையில்லா மிதிவண்டிகளும்,
திருமங்கலம் ஒன்றியம், கப்பலூர் தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 58 விலையில்லா மிதிவண்டிகளும்,

என மொத்தம் 3,318 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) செல்வராஜ் முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன்,மாவட்ட கல்வி அலுவலர் (திருமங்கலம்) ப.இந்திராணி அவர்கள்,; நேர்முக உதவியாளர் (முதன்மைக் கல்வி அலுவலர்) ச.சின்னத்துரை, பள்ளித்துணை ஆய்வாளர்,கண்ணன் , பள்ளித்தலைமை ஆசிரியை ஜெயசாந்தினி, வட்டாட்சியர், தனலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

1 × 3 =

Related Articles

Close