செய்திகள்போலீஸ்

மதுரை மெயின்ரோட்டில் பெண்ணின் தங்கசங்கிலி பறிப்பு: டூவிலரில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை

மதுரையில் திருப்பரங்குன்றம் மெயின்ரோட்டில் டூவிலரில் கணவரின் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகரைச் சேர்ந்தவர் செல்வம், இவரும் அவரது மணைவி பேச்சி வயது 50. ஆகியோர், திருப்பரங்குன்றம் சாலையில் டூவிலரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பேச்சி கழுத்தில் அணிந்திருந்த பத்து சவரன் நகையை பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொரேனா ஊரடங்கில் வருமானம் இன்றி தவிக்கும் திருடர்கள் தற்போது வெளியே முகம் காட்டத் துவங்கியுள்ளனர். ஆதலால் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டி காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக ஆட்கள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் மற்றும் இரவு நேரத்தில் செல்வதை தவிர்க்கவும். குறிப்பாக கழுத்தில் தங்க நகைகளை அணியும்போது பாதுகாப்புடன் இருப்பது நலம்.

Spread the love

நா.ரவிச்சந்திரன்- நிருபர்

முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினமணி பத்திரிக்கையில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றியாற்றியுள்ளேன். அதனை தொடர்ந்து தினவணிகம் தினசரி நாளிதழ் பத்திரிக்கையில் கடந்த 11 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி வருகின்றேன். மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலியில் நிருபராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றேன்

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat