செய்திகள்மதுரை

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா இன்று (08.20.2020) நடைபெறுகின்றது. கடந்த ஏழு வருடங்களுக்குப் பிறகு தெப்பக்குளம் முழுவதுமாக நீர் நிறைந்துள்ளதால், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு கூட்டம் களைகட்டியுள்ளது. தற்போது முதல்கட்ட நிகழ்வாக அம்மையும், அப்பருமாக அழகிய சப்பிரத்தில் ஏறியபடி தெப்பத்தை சுற்றிவந்தனர்.

பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகின்றது.

இரவு 8 மணி அளவில் தெப்பத்திருவிழா நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கியமாக அந்த வழி சாலைகளின் போக்குவரத்துகள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

8 + eleven =

Related Articles

Close