செய்திகள்மாநகராட்சி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் ஆய்வு

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர் ச.விசாகன் இன்று (01.08.2020) திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.159.70 கோடி மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலையம் மறுசீரமைப்பு பணிகளையும், பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா பயணிகள் மையம் கட்டுதல் பணிகளையும்.

பாரம்பரிய நடைபாதை அமைத்தல் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி மதிப்பீட்டில் மதுரை மேற்கு நுழைவுவாயில் கோட்டைச்சுவர் முதல் நேதாஜி சாலை வழியாக மீனாட்சியம்மன் கோவிலுக்கும், அம்மன் சன்னதியில் இருந்து தேர்முட்டி வழியாக விளக்குத்தூண் வரையிலும், அம்மன் சன்னதியில் இருந்து சொக்கநாதர் கோவில் வரையிலும், திண்டுக்கல் சாலை முதல் டவுண்ஹால் ரோடு தெப்பம் வரையிலும் என பாரம்பரிய விளக்குடன் நடைபாதை அமைக்கும் பணியினையும்.

விளக்குத்தூண் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புராதன சின்னங்கள் மேம்படுத்துதல் பணிகளையும், அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.15.24 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளான நான்கு சித்திரை வீதிகள் மேம்படுத்துதல், மீனாட்சி பூங்காவை மேம்படுத்துதல், கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துதல் பணிகளையும்.

புதுமண்டபத்தில் உள்ள கடைகளை மாற்றுவதற்காக குன்னத்தூர் சத்திரத்தில் ரூ.7.91 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் வடக்கு ஆவணி மூல வீதியில் ரூ.40.19 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்கும் கட்டுமான பணியினைகளையும் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணியினை விரைந்து முடிக்குமாறு கூறினார்.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர்கள் சேகர், பி.எஸ்.மணியன், செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கியசேவியர், மயிலேறிநாதன், உதவிப்பொறியாளர்கள் தியாகராஜன், முருகன், ஆறுமுகம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love

நா.ரவிச்சந்திரன்- நிருபர்

முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினமணி பத்திரிக்கையில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றியாற்றியுள்ளேன். அதனை தொடர்ந்து தினவணிகம் தினசரி நாளிதழ் பத்திரிக்கையில் கடந்த 11 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி வருகின்றேன். மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலியில் நிருபராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றேன்

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat