செய்திகள்மதுரை

மாநில கூட்டுறவு வங்கி இணைய தலைவர் செல்லப்பாண்டி படத்திற்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அஞ்சலி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுகவின் மூத்த தலைவரும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவு இணையம் மாநில தலைவருமான கூ.செல்லப்பாண்டி கடந்த மாதம் வயது மூப்பு காரணமாக இறந்தார் சோழவந்தானில் உள்ள இவரது இல்லத்திற்கு வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செல்லப்பாண்டி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த செல்லப்பாண்டி மகன் மாணவரணி செழியன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் இதில் மாணிக்கம் எம்எல்ஏ, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் அமிர்தா, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கோமதி, மணிகண்டன், அதிமுக நிர்வாகிகள் நகரச் செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் பெருந்தலைவர் ராஜேஷ்கண்ணா, முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் நாகராஜன், மருதுசேது, முனியாண்டி, ராமு, உங்குசாமி, கனகசுந்தரம், கூட்டுறவு சங்க செயலாளர்கள் வீரணன், வசந்தி, செங்குட்டுவன், சுந்தர் இல்ல ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகை ஞானசேகரன், பஞ்சவர்ணம், ராமலிங்கம், சிவகுமார், தங்கப்பாண்டி மைக்கேல், தங்கப்பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்பிகா, சுகுமாரன் உள்பட நிர்வாகிகள் ராமசாமி மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Spread the love

நா.ரவிச்சந்திரன்- நிருபர்

முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினமணி பத்திரிக்கையில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றியாற்றியுள்ளேன். அதனை தொடர்ந்து தினவணிகம் தினசரி நாளிதழ் பத்திரிக்கையில் கடந்த 11 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி வருகின்றேன். மதுரை மாவட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலியில் நிருபராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றேன்

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat