இந்துவரலாறுவீடியோ

மீனாட்சி அம்மன் கோவிலின் பெருமைகள்

Meenakshi Amman Temple

மீனாட்சி அம்மன் கோவிலின் முக்கிய சிறப்புகள்

சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் வெள்ளி சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். மற்ற எல்லா இடங்களிலும் இடது காலைத் தூக்கி நடனமாடும் நடராசர், இங்கு வலது காலைத் தூக்கி வைத்து நடனமாடுகிறார்.

சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேசுவரர் சிவலிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். குலசேகர பாண்டியன் காலத்தில் இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.

சுந்தரேசுவரர் , சொக்கநாதர், சோமசுந்தரர் எனும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இது குறித்து திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

மீனாட்சிக்கு, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற எண்ணற்றப் பெயர்கள் உள்ளன. மீனாட்சியை அங்கயற்கண்ணி என தமிழில் அழைக்கின்றனர். இவரை தடாதகை பிராட்டி என்றும் அழைப்பதுண்டு.

இவர் மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடக்கும் அபிசேகங்களைப் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. எனவே மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகின்றன. அதன்பின்பே மூலவரான சிவபெருமானுக்கு பூசைகள் செய்யப்படும். இதற்கு மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து எப்போதுமே தன்னுடைய கணவனுக்கு தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால் கணவரை எழுப்பும் முன்பே மனைவியான அம்பிகை அபிசேகத்தினை முடித்து தயாராகிறாள். இதனால் காலையில் முதல் பூசை மீனாட்சிக்கு செய்யப்படுகிறது.

ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. சுவாமி சந்நிதி பிராகாரங்களில் 64 திருவிளையாடல் காட்சிகள் சிற்பங்களாக இருக்கின்றன.

இக்கோவிலின் தல மரம்: கடம்பம், புனித நீர்: பொற்றாமரைக்குளம் மற்றும் வைகை. பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் கிடைக்கப்பெற்ற படிக லிங்கம், இன்றும் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேசுவரர், சொக்கநாதர் என்றும் அறியப்படுகிறார். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலைச் சுற்றி ஆடி வீதிகளும், அதற்கு வெளியில் சித்திரை, ஆவணி, மாசி என சதுர அமைப்பிலான தமிழ் மாதப் பெயர்களினான தெருக்கள் இருக்கிறது.

மதுரையிலுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மீனாட்சி அம்மனை வழிபட்ட பின்பே சுந்தரேசுவரரை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள சிவன் சுந்தரேசுவரர் என அழைக்கப்படுகிறார். தேவாரக் காலத்தில் திருவாலவாய் என அழைக்கப்பட்டது.

சுந்தரேசுவரர் சன்னிதிக்கு செல்லும் வழியில் இடது புற தூணில் பாவாடை சாற்றப்பட்டு ஒரு தெய்வம் இருக்கும், கர்பிணிப்பெண்கள் சுகப்பிரசவம் வேண்டி அந்த தெய்வத்தின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி வேண்டி கொள்வர். அவ்வாறு ஊற்ற பட்ட எண்ணெய் அங்கு இருந்து எடுத்து வந்து கர்பிணிப்பெண்கள் தங்கள் வயிற்றில் தடவி கொண்டால் சுகப்பிரசவம் நடக்கும் என்று நம்பிக்கை.

இங்கு முதலில் அன்னை மீனாட்சியை தரிசித்த பின்னரே சொக்கரை வழிபடும் முறை நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

ஆண்டுதோரும் 10 நாள் மீனாட்சி திருக்கல்யாணம் திருவிழா நடைபெறுகின்றது. சித்திரை மாதம் நடைபெறும் இத்திருவிழாவைக் காண உலகெங்கிலும் இருந்து மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிகின்றனர்.

மேலும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, முடிசூட்டுவிழா, திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலக அதிசயங்களைத் தேர்வு செய்வதற்காக ஒரு இணையதளம் செய்த முயற்சியில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும் ஒன்றாக இடம் பெற்றிருந்தது.

இக்கோயிலின் வெளிப்பகுதியில் கோயிலைச் சுற்றி வருவதற்காக மின்கலத்தில் இயங்கும் வண்டிகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் இந்த வண்டிகளின் மூலம் கோயிலை மகிழ்வுடன் சுற்றி வருகின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்து போகும் வகையில் “1000 கால் மண்டபம்” எனும் தூண்கள் உள்ள பகுதியிங்கு இருக்கிறது.

இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம் பிரசிபெற்றதாகும்.

மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசைபாடும் 5 இசைத் தூண்கள், ஆயிரம் கால் மண்டபத்தில் இரு இசைத் தூண்கள் ஆக மொத்தம் 7 இசைத் தூண்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

கோயிலின் கிழக்குக் கோபுரத்திற்கு எதிரே 124 சிற்பத்தூண்கள் அடங்கிய புது மண்டபம் ஒன்றும் உள்ளது. இந்த புது மண்டபம் முழுவதும் சிறு வணிகக்கடைகளாக அமைக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து வியந்து போகும் வகையில் “1000 கால் மண்டபம்” எனும் தூண்கள் உள்ள பகுதியில் இருக்கிறது.

இக்கோவிலில் இருக்கும் முக்குறுணி விநாயகர் சந்நிதியில் வழங்கப்படும் திருநீர் பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக பக்தர்களால் கருதப்படுகிறது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடின் கீழ் இந்த கோயில் அக்டோபர் 1, 2017 நிலவரப்படி இந்தியாவில் சிறந்த ‘ஸ்வச் ஐகானிக் பிளேஸ்’ என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் செல்போன் மற்றும் கேமரா கொண்ட செல்ல தடைவிதிக்கப்பட்ட ஓரே கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

திருப்பதியைப்போல் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னையின் பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகின்றது.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை காணுங்கள்… கேளுங்கள்…

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat