யோகா

முதுகுவலியை தீர்க்கும் புஜங்காசனம்

இந்த ஆசனாவை செய்வதால் முதுகு வலி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் உதவும். உங்கள் முதுகு தண்டையும் பலப்படுத்தும். இரண்டு கைகள் மற்றும் கால்களை தரையில் வைத்து, தலை கீழே பார்த்தபடி உடல் முழுவதும் முக்கோண வடிவில் வரும்படி குனிந்து நிற்க வேண்டும்.

அப்படியே குப்பற படுத்தது போல தரையில் தட்டையாக உடல் முற்றிலும் பதியும் படி படுக்கவேண்டும். இப்போது மெதுவாக இரண்டு கைகளையும் அப்படியே தரையில் ஊன்றி முதுகுத்தண்டை பின் வலைத்தவாறு அடி வயிறு வரை தலையை நேராக பார்த்த படி எழ வேண்டும்.

இது பார்பதற்கு நாகப் பாம்பு படம் எடுப்பது போன்று தோற்றம் தரும். இப்படி சில வினாடிகள் இருந்துவிட்டு, மீண்டும் முன் தொடங்கிய முக்கோண வடிவத்திற்கு திரும்ப வேண்டும். இப்படியே 1௦ முறை செய்ய வேண்டும்.

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.
error: Copy Right Hello Madurai !!
Open chat