இயற்கை மருத்துவம்

முருங்கை கீரையின் மருத்துவங்கள்

முருங்கை கீரையை உணவில் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் சிறப்பாக வெளியேறும். இதில் நிறைந்துள்ள சத்துக்கள் சிறுநீரகத்தை வலுவடையச் செய்யும். முருங்கை கீரையில் உள்ள விட்டமின் சி மன நலத்திற்கு உகந்தது. இந்தக் கீரையை எடுத்துக் கொள்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே காணப்படுகின்றது. கூடுதலாக நினைவுத்திறன் அதிகரிக்கும். குழந்தைகளுக்குச் சத்தான இந்தக் கீரையைத் தரலாம்.

இந்தக் கீரை ரத்தசோகையைக் குணப்படுத்துவதற்குப் பெயர் போனது. வாரம் 2 முறை இந்த கீரையை எடுத்துக் கொள்வதால் இரத்தம் சிறப்பான வகையில் விருத்தியடையும். இதற்குக் காரணம் இந்த கீரையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து தான். அதனால் இந்தக் கீரையை உணவில் எடுப்பவருக்கு ரத்தசோகை வருவதற்கு வாய்ப்பே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க இந்த கீரை உதவும்.

பெண்களின் கர்ப்பப்பை வலுவடைய இந்தக் கீரை உதவுகிறது. இதனால் பெண்களுக்குக் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதுபோல ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. ஆக இருபாலருக்குமே குழந்தை பாக்கியம் ஏற்பட இந்த கீரை உதவுகிறது.

Spread the love

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat