கிச்சன் டிப்ஸ்

முருங்கை மகத்துவம்

முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. முருங்கைக்காய் சாம்பார், கீரை தொவட்டல் என பல வகையில் உதவும் முருங்கையில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. முருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்து பழமொழி. முருங்கை கீரையில் தயிரில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிக புரதசத்தும் ஆரஞ்சு பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிக பொட்டாசியமும் கேரட்டில் உள்ளதை விட நான்கு மடங்கு வைட்டமின் ஏயும் பாலில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிக கால்சியமும் உள்ளது.

முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சூப்வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுக்கு நல்லது. பெண்கள் முருங்கை கீரையை வேர்க்கடலையுடன் சேர்த்து சாப்பிட்டு வர கருப்பை சம்பந்தமான பிரச்சினை தீரும். வைட்டமின் ஏ சத்து நிரம்பி இருப்பதால் ஒளிபடைத்த கண்ணுடனே வளம் வரலாம். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகப்படுத்தி ரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு நீக்க மிகவும் உதவியாக இருப்பது முருங்கை இலை. ஆண் மற்றும் பெண்களுக்கு உள்ள மலட்டுத் தன்மை நீங்கவும் இளமைப் பொலிவு பெறவும் முருங்கை முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பச்சையான முருங்கை இலைச்சாறு ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு அதில் பாதி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட உடல் தொப்பை மறைந்து நல்ல தேகம் பெறலாம். மனித உடம்பிற்கு தேவையான இருபது அமினோஅமிலங்களில் பதினெட்டு முருங்கை கீரையில் உள்ளது. மாமிசத்தில் இருப்பதைப் போன்ற புரதச்சத்துகளும் இதில் உள்ளது. முருங்கை கீரையை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

eight − 4 =

Close