ஜூவல்லரிபெண்கள்

மூக்குத்தி ரகசியம்

மூக்குத்தி பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு அணிகலன். மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் இயற்கையாகவே அம்சமாக காட்சியளிப்பர். தற்பொழுது சில பெண்கள் முக்குத்தி அணிவது இல்லை. ஆனால் மூக்குத்தி அணிவதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு.

இடது புறத்தில் மூக்குத்தி அணியும் போது பெண்களின் வலது புற சுவாசம் பலமாகிறது. இதனால் வலது பக்க மூலையின் செயல்பாடுகள் அதிகமாகி இந்த ஹிப்போதலாமஸ் சீராக இயக்க உதவுகிறது. மேலும் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் பெரும்பாலானவை வலது புற மூலை இயக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் வலது பக்க மூலை செயல்பாடுகளை அதிகரிக்க இந்த சுவாச மாற்றம் பெண்களுக்கு உதவுகிறது.

இடது புறம் மூக்குத்துவதால் பெண்களின் ஒற்றைத்தலைவலி, பார்வைக் கோளாறு, சளி தொல்லை. மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. இடது பக்கம் மூக்குத்துவதால் வலது புற சுவாசம் சீராகுகிறது. இதனால் பெண்களின் சிந்தனா சக்தி மற்றும் மன ஒரு நிலைப்படுகிறது. ஆக பெண்களே நீங்கள் இடது புறம் மூக்குத்தி அணிவதுதான் சிறப்பு. ஒரு வேளை வலது புறம் முக்குத்தியிருந்தால், இடது புறத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். உங்களின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tags
Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

eighteen + 15 =

Close