கார்

ராயல் என்ஃபீல்டு ஷோரும் மீண்டும் இயக்கம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு ஒவ்வொன்றாக தளர்ந்து வரும் வேளையில், மீண்டும் தங்கள் பயணத்தை ஒவ்வொரு வரும் புத்துணர்ச்சியுடன் துவங்கியுள்ளனர். நானும் அப்படித்தான் நீண்ட நாட்கள் சாலையில் நானும் என் இருசக்கர வாகனமும் பயணிக்காமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தோம். இப்பொழுதுதான் முதல் டிரைவிங் போனோம்.. புது லவ்வர்ஸ் போல.

இப்பொழுது மீண்டும் போக்குவரத்துப் பயணம் களை கட்டத்துவங்கியுள்ளது. உள்ளூர்களுக்கிடையே செல்லும் இந்த பயணம் விரைவில் உலகம் முழுவதும் இயங்கும் என்ற நம்பிக்கை நம் எல்லோர் மனதிலும் மெல்லப் பிறந்திருப்பது உண்மைதான்.

சரி விசயத்திற்கு வருகின்றேன். நான் என்னதான் பைக் ரசிகன் என்றாலும், எனக்கு மட்டுமில்ல எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான கனவு பைக் னா. அது புடு..புடு..புடு வென தெருவையே திரும்பி பார்க்க வைக்கும் புல்லட்தான். அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை இதற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தனிதான்.

பழைய புல்லட் பைக் முதல் இன்றைய புல்லட் பைக் வரையிலான சுவரஸ்யமான தகவல்களை  அடுத்தடுத்த பதிவுகளில் (வீடியோ) காணலாம். இப்போது எல்லோருக்கும், எனக்கும் விருப்பமான புல்லட் விற்பனையின் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு மீண்டும் தனது விறப்னையை துவங்கியிருக்காங்க. அது என்னவென்று தெரிந்து கொள்வோம். வாங்க…

நாடு முழுக்க இயங்கி வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பாண்டு கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு காரணமாக ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மூடப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கு இன்று (மே 18) துவங்கி மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் இந்த ஊரடங்களில் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. இது சிறு தொழிலாளர்களும், வியாபாரிகளுக்கும் நிச்சயமாக சிறிய சந்தோசம் அளித்திருக்கும்.

அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதை அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும், விற்பனை மற்றும் சர்வீஸ் மையம் செல்லும் முன் வாடிக்கையாளர்கள் அழைப்பு மூலம் முன்பதிவு பெற்று வரவேண்டும் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ராயலான இந்த பைக் விற்பனை திறக்கப்பட்டுள்ள போதிலும், அங்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ரொம்ப குறைவு என்று பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தகவல் வந்திருக்கு. அதே சமயத்தில் வாடிக்கையாளர்கள் முக கவசம், கை சுத்தம், சமூக இடைவெளி என்று எல்லாமே கடைபிடிக்கப்படுகின்றதாம்.

நீங்கள் உங்கள் பகுதி ராயல் என்ஃபீல்டு ஷோரூம்க்கு இப்ப சமூக இடைவெளியுடனும், உரிய பாதுகாப்புடனும் செல்லுங்கள். இத்தனை நாட்கள் இயக்காமல் வைத்திருந்த உங்கள் புல்லட்ட ஒரு தட்டு தட்டி, பட்டி, டிங்கர் பார்த்து ( சர்வீஸ் பார்த்து ) பயணத்தை டுபு..டுபு..டுபு… னு பட்டைய மலரும் நினைவுடன் துவங்குங்கள்.

Car Ganesh

கார், பைக் மீது நான் கொண்ட காதலினால் என் பெயரை கார் கணேஷ் என்று மாற்றிக் கொண்டவன். எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, அது என்ன பைக்காக இருந்தாலும் சரி, பெட்ரோல் இருந்தால் மட்டும் போதும், போய்க் கொண்டே இருப்பேன் சலிக்காது சாலைகளின் மீது.பைக்கே இப்படி என்றால் கார் எல்லாம் சொல்லவே வேண்டாம். டப்பா காராக இருந்தாலும் இந்த ராஜா கைய வச்சா அது ராங்கா போவதில்லை. அந்த பாட்டுத்தான். எல்லாவிதமான பைக்கிலும் சவாரி செய்து ஒரு வலம் வந்திருக்கும் நான் ஒரு சில கார்கள் மட்டும் கனவாகவே உள்ளது. இந்த பக்கத்தில் புதிய கார், பைக், மெக்கானிக், டிப்ஸ் என எல்லாமே உங்களுக்கு அள்ளித் தரப்போகின்றேன். நிறை இருந்தால் பாராட்டுங்கள், குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.இப்படிக்கு... உங்கள் கார் கணேஷ்
error: Copy Right Hello Madurai !!
Open chat