இந்துவரலாறுவீடியோ

வடக்கு கிருஷ்ணன் கோயில் தெரு

வடக்குமாசி வீதியிலுள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமிகோயில் பேச்சு வழக்கில் வடக்கு கிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படுகிறது. மீனாட்சி கோயிலுக்கு வடக்கே இக்கோயில் அமைந்திருப்பதால் இப்பெர் பெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் (1623-1659) இக்கோயில் சிறிய அளவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டபோதும் 1909 இல் தான் கோயிலின் கருவறை முற்றிலும் கல்லால் செய்யப்பட்டது. 1949இல் இன்றைய உருவத்தைப் பெற்று முழு வளர்ச்சி பெற்றது.

இதன் மூலவர் கருவறை முற்றிலும் கல்லால் ஆனது. சிற்ப வேலைப்பாடு மிக்கது. கோயிலின் உன்னத கலைப்படைப்பு இக்கோபுரத்தின் அடிப்பகுதியாகும். நுழைவாயிலில் முற்றிலும் கல்லினால் எழுப்பப்பட்ட கோபுரத்தின் அதிட்டானம், பீடம் ஆகிய பகுதிகளை கண்டு இன்புறலாம். இந்நூற்றாண்டு சிற்பிகளின் கைவண்ணத்தை ஆலயம் எங்கும் கண்டு மகிழலாம்.

இக்கோயில் ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமானது. மாசி மாதம் நடைபெறும் திருவிழாவினையயாட்டி, இக்கோயிலின் உற்சவர் யாதவர்கள் அதிகம் வாழும் திருப்பாலைக்கு எழுந்தருள்வது வழக்கம். இக்கோயில் அரமந்துள்ள தெருவுக்கு வடக்குக் கிருஷ்ணன் கோயில் எதரு என்று பெயர்.

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat