கிச்சன் டிப்ஸ்பெண்கள்

வந்தாச்சு பாத்திரம் கழுவும் இயந்திரம்

வாஷிங் மெஷின் போல பாத்திரம் கழுவும் இயந்திரம் வந்துவிட்டது. இதன் விற்பனை தற்போது சக்கைபோடுபோடுகின்றதாம். இருக்கும் இந்த எந்திரத்தில் பாத்திரங்களையும் தட்டுக்களையும் அது அதற்கான இடங்களில் அடுக்கி விட்டு மூடிவிட்டால் போதும். புத்தம் புதியது போன்று, சுத்தமாக கழுவப்பட்ட பாத்திரங்கள் குறிப்பிட்ட சில நிமிடங்களில் கிடைத்துவிடும். கழுவுதல், அலசுதல், நீராவி மூலம் கிருமிகளையும், அழுக்குகளையும் அகற்றுதல் போன்ற மூன்று முக்கிய பணிகளை இந்த டிஷ் வாஷர் எந்திரத்தில் நடைபெறுகின்றன.

இதற்காக, டிடர்ஜெட், சாப்ட் உப்பு, தண்ணீர் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. எந்தளவுக்கு டிடர்ஜெட், சாப்ட் உப்பு, தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடும் டிஷ் வாசர் எந்திரங்களும் வந்துள்ளன. இந்த எந்திரத்தின் உட்புறத்தில், பாத்திரங்கள் அதாவது குண்டான் போன்றவை, தட்டுக்கள், கண்ணாடி குவளைகள், பீங்கான் தட்டுக்கள், கத்தி, ஸ்பூன் போன்றவற்றை வைக்க தனித்தனி அடுக்குகள் உள்ளன. அவற்றில் எளிதாக பொருட்களை வைத்து எடுக்க, அட்ஜெஸ்டபிள் வசதிகள் உள்ளன. கமுன்பக்கமாக திறப்பது, மேல் பக்கத்தில் திறப்பது என வாஷிங் மெஷின் போல இதிலும் இரண்டு வகைகள் உள்ளன.

ஒரே சமயத்தில் 20 முதல் 90 எண்ணிக்கையிலான சிறிய, பெரிய பாத்திரங்கள், டம்ளர்கள், தட்டுகள், தேக்கரண்டி, கரண்டி போன்றவற்றை ஒரு சில நிமிடங்களில் சுத்தமாக துலக்க முடியும். யாராலும் எளிதாக இயக்கக் கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. துருப்பிடிக்காத வகையில், இவைகள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் அமைந்துள்ளன. இதிலும் புல்லி ஆட்டோமெடிக், செமி ஆட்டோமெடிக் என இரு வகை உள்ளன. ஆனால் ஃபுல்லி ஆட்டோமேடிக் இயந்திரங்களே பல இல்லத்தரசிகளின் தேர்வாக உள்ளது.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

six − two =

Close