இந்துவீடியோ

வில்வம் இலையின் அற்புதம்

Vilvam

வில்வம்

வில்வம் என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது சிவபெருமானைத் தான். சிவபெருமானுக்கு  பூஜிக்கப்படும் இலை வில்வம். தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் என வில்வம், பாதிரி, வன்னி, மா, மந்தாரை போன்ற மரங்கள் அழைக்கப்படுகின்றன.

வில்வ இலை சிவனாகவும் ,அதன் முட்கள் சக்தியாகவும் ,கிளைகள் வேதங்களாகவும்,வேர்கள் முக்கோடி தேவர்களாகவும் போற்றப்படுகின்றன. 1 வில்வ இலையால் சிவனை பூஜித்தால் 1லட்சம் தங்க புஷ்பங்களை கொண்டு பூஜிப்பதற்கு சமம். சிவனுக்கு பிடித்த வில்வ இலை கொண்டு பூஜிக்க அவனை மிக அருகில் நெருங்க முடியும். சிவனின் அருளை பெற முடியும்.

வில்வம் லக்ஷ்மி தேவியின் திருக்கரத்திலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. வில்வ மரத்தை வழிபட்டால் லக்ஷ்மி தேவியின் அருள் பரிபூரணமாக கிட்டும். சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீயசக்தி அகன்று தோஷங்கள் மறைந்து, ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினை தணிக்க நம் முன்னோர்கள் குளிமை பொருந்திய வில்வத்தை சாற்றி வழிப்பட்டன. பூஜைக்கு பயன்படுத்துகிற வில்வத்தை சூரியோதயத்திற்கு முன்னதாகவே பறிக்கவேண்டும். வில்வத்திற்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.எத்தனை நாட்கள் ஆனாலும்,உலர்ந்து போனாலும் கூட பூஜைக்கு பயன்படுத்தலாம்.

 

முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோவை காணுங்கள்… கேளுங்கள்…

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat