செய்திகள்மதுரை

வேலை வாய்ப்பு மற்றும் பட்டமளிப்பு விழா

மதுரை மாவட்டம் வேலை வாய்ப்பு  மற்றும் பயிற்சித்துறையின்  கீழ் இயங்கும் மதுரை கோ.புதூர் அரசினர்  தொழிற்பயிற்சி  நிலையத்தில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், தலைமையில மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் 25.02.2020 அரசு ஆண்கள், பெண்கள், செக்காணூரனி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த 500 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி தெரிவிக்கையில்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பல்வேறு தொழில் பிரிவுகளில் தொழில் பயிற்சி நிலையங்கள் வாயிலாக பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை பெற்று தருகிறது. திறன் மிக்க மனித வளத்தை கிடைக்கச் செய்யும் வகையில் தொழில்பயிற்சி  நிலையங்கள் திறன் பெற்ற பயிற்சியாளர்களை உருவாக்கி வருகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 83 அரசு தொழில் பயிற்சி நிலையங்களும், 476 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களும் திறன் பயிற்சி அளித்து வருகின்றன. இப்பயிற்சி நிலையங்களில் 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியற்கு 55 பொறியியல் மற்றும 28 பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 28 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் ரூ.159 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரை, மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் செக்காணூரனி ஆகிய மூன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றன. மதுரை கோ.புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 1961-ல் முன்னாள் முதலமைச்சர் காமராஜர்  துவக்கி வைக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 1657 மாணவர்களும், 220 மாணவிகளும் பயிற்சி பெறுகின்றனர்.

இந்த தொழில்பயிற்சி நிலையங்களின் மூலம் 31 தொழிற் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 1,170 மாணவ, மாணவிகள் பயிற்சி முடித்து செல்கின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மதிவண்டிகள், இலவச புத்தகங்கள், சீருடைகள், காலனிகள், வரைபடக் கருவிகள், இலவச பேருந்து பயண அட்டை மற்றும் இடைநிற்றல் கல்வியை தடுக்க ரூ.500 மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, மண்டல பயிற்சி இணை இயக்குநர் எஸ்.ரவிபாஸ்கர், மதுரை துணை இயக்குநர் ஜெ.அமலா ரெக்சலீன், மதுரை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் கூட்டுறவு நுகர்வோர் சங்க தலைவர் ராஜா, உதவி இயக்குநர் கே.பாலமுருகன், செக்காணூரனி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்.எல்.தர்மராஜ், மதுரை மகளிர் அரசு தொழிற்பயிற்,சி நிலைய முதல்வர் வசந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

14 + ten =

Close