சினிமாசினிமா துளிகள்

ஷில்பா செட்டியின் இரண்டாவது பெண் குழந்தைக்கு ஏன் வாடகைத் தாய்

ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக உலகப் புகழ் பெற்ற திரைப்பட நடிகை ஷில்பா செ­ட்டியின் அழகு 44 வயதைத் தாண்டியும் மின்னுகின்றது என்றால் அந்த அளவிற்கு உடற் பயிற்சியிலும், உணவிலும் கட்டுப்பாட்டை தொடர்ந்து வருகின்றார். 1996 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தின் வாயிலாக தென்னிந்தியாவின் இதயங்களில் இடம்பிடித்தார்.

அதன் பிறகுஷில்பா செட்டி மீண்டும் ஒரு முறை இளைய தளபதி விஜய் உடன் குஷி திரைப்படத்தில் ஒரு பாடல்காட்சிக்கு நடனமாடி சென்றவர்தான் பின்பு தமிழ் திரை உலகிற்கு வரவே இல்லை. ஷில்பா செட்டியின் அழகு மட்டுமல்ல அவரது நடனமும் அனைவரையும் ஈர்க்கவல்லது.

2009 ஆம் அண்டு தொழிலதிபர் ராஜ் குந்தரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவிற்கு முழுக்குப் போட்டுவார் என்றும், உடல் பருத்து வழக்கமான பெண்மணியாக மாறிவிடுவார் என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஷில்பா திருமணத்திற்குப் பிறகும் சினிமாவை தொடரந்தார். உடலை அப்படியே செதுக்கி வைத்திருந்தார்.

இந்நிலையில் 2012ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு நீண்ட பயணத்தை தொடங்கினார். கிட்டதட்ட 4 வருடங்கள் தன் மகன் மீதான வளர்ப்பிலும், சினிமா படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில், தன் மகனுக்கு ஒரு குட்டி பாப்பா துணையாக வேண்டும் என முடிவு செய்தார். ஏனெனில் மகன் தனிமையில் இருப்பதாக உணர்ந்தார் ஷில்பா.

அதன் பிறகு அதற்கான முயற்சியில் களமிறங்க, இரு முறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. 8 வருடங்களுக்குப் பிறகு இந்த நிலை என்பதை ஷில்பாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மீண்டும் முயற்சிக்க முடிவு செய்தார் ஷில்பா. ஆனால் இதற்கு மருத்துவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இனி நீங்கள் கருவுறும் முயற்சியை தொடர்ந்தால் அது உங்கள் உடலுக்கு ஆபத்து என்று கூறியுள்ளனர்.

சரி, கொஞ்ச காலத்திற்கு இதை ஒத்தி வைக்கலாம் என்று முடிவெடுமத்தார் ஷில்பா. அதன் பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்தார். அதிலும் பல்வேறு சிக்கல்கள் வர, அதை கைவிட்டு, வாடகை தாய் பக்கம் திரும்பினார். பிறகு என்ன இந்த முயற்சியில் ஷில்பாவிற்கு வெற்றி கிடைத்தது. ஆமாம் அவர் நினைத்ததுபோல் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை வாடகைத் தாயின் மூலமாகப் பிறந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 15ந் தேதி 2020 அதை உறுபட அறிவித்தார் இல்லை. ஷில்பா தம்பதியினர். குழந்தையுடன் புகைப்படங்களையும் வெளியிட்டார். இப்போது இரண்டு மாதமான அந்த குழந்தையின் பெயர் சமீஷா. சமீஷா என்ற பெயருக்கு விளக்கமும் அளித்துள்ளார். அதாவது, ‘sa’ என்றால் வேண்டும் எனவும் Misha என்றால் ரஷ்ய மொழியில் கடவுளைப் போன்ற ஒருவர் என்பதை குறிக்கும் கடவுளைப் தெரிவித்துள்ளார்.

kamali

ஹலோ மதுரை மாத இதழின் வடிவமைப்பாளராக செயல்படுகின்றேன். அத்துடன் பெண்களுக்கான அழகு குறிப்புகள் முதல் மருத்துவம் வரையிலாக தகவல்கள் மற்றும் கட்டுரைகள் எழுதுவது எனது பொழுதுபோக்கு. மேலும், சமையல் குறித்த எழுத்துகளும், காணொளிகளும் படைப்பாக செய்து வருகின்றேன். இது தவிர மதுரை குறித்த வரலாற்று தகவல்கள் மற்றும் ஆன்மீகம் குறித்தும் எழுதி வருகின்றேன்.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat