கிறித்தவம்

ஸ்பெயின் குழந்தை இயேசு

குழந்தை இயேசுவின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. பிரேகு நகரில் குழந்தைஇயேசுவின் புகழ் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பிய நாடு முழுவதும்பரவியிருந்தது.ஆரம்ப காலத்தில் குழந்தை இயேசுவின் திரு உருவம் ஸ்பெயின் நாடிலிருந்து வந்தது என வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

ஸ்பெயின் நாட்டின் இளவரசி குழந்தை இயேசுவை பாதுகாத்து பூஜை செய்துவந்தார்.தன் மகளான போலிக்சோனா லோகோவிட்ஸ்க்கு திருமணம் ஆன பின் அவரிடம்குழந்தை இயேசு திருச்சொரூபத்தை அளித்து பூஜை செய்து வருமாறு கூறினார்.

Jesus Christஅவரும் அதை பூஜை செய்து பல சிறப்புகளை பெற்றார். தன் கணவர் இறந்த பின்குழந்தை இயேசு சிலையை பிரேகு கார்மல் சபைத் துறவிகளுக்கு கொடுத்து, குழந்தைஇயேசுவின் பெருமைகளைக் கூறி தொடர்ந்து பூஜை செய்து வருமாறு கூறினார்.

அவர்களும் குழந்தை இயேசுவை பூஜித்து வந்தனர். ஆசிரமம் நன்கு முன்னேற்றம்அடைந்தது. 30 ஆண்டுகள் நடந்த கடும் போருக்கு பின் தந்தை சிரிலிஸ் பிரேகு நகரமடத்திற்கு சென்று குழந்தை இயேசு சிலையை சிறிய கோவிலில் நிர்மாணித்தார்.

அவர் குழந்தை இயேசுவை பிரார்தித்துக் கொண்டிருந்த போது அசரீரி குரல் என் மேல்இரக்கமாயிருந்தால் நான் உன்மேல் இரக்கமாக இருப்பேன். உனக்கு அமைதிஅளிப்பேன் என கூறியது.

அதன் பின் அவர் சிதைந்திருந்த குழந்தை இயேசு சிலையை சரி செய்ய நிதி திரட்டிவேறு புதிய சிலையை நிர்மாணித்தார், ஆனால் அதன் மேல் விளக்கு கம்பம் உடைந்துஅந்த சிலை உடைந்து போனது,

தன் திருச்சுரூபத்தை அலட்சியப்படுத்தியது குழந்தை இயேசுவுக்கு பிடிக்கவில்லை எனதெரிந்தது. அதன் பிறகு பதவியேற்ற துறவியார் திருச்சுரூபத்தை சரி செய்தார். அங்கு வருவோர் எல்லா நோயும் நீங்கப்பெற்று எல்லா வளமும் பெற்று வந்தனர்.அவரது அருள் பெற்றோர்அந்த அனுபவங்களை தெரிவிக்க உலகம் முழுதும் குழந்தைஇயேசு புகழ் பரவி வருகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

one × 2 =

Close