காவல்துறைசெய்திகள்

60 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி 11.02.2020 ந் தேதி B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் லோகேஸ்வரி ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கான்பாளையம் 3வது தெரு சந்திப்பு, அண்ணாமலை சரக்குக்கடை அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தார்.

மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் மணிகண்டன் 45/2020, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, கான்பாளையம், மதுரை என்பது தெரியவந்தது. எனவே மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 60 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பணம் ரூபாய்.1,89,630/- ஆகியவற்றை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதுரை மாநகர் முழுவதும் தீவிர சோதனை நடத்த காவல் ஆணையர் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

twenty − five =

Related Articles

Close